ஜனாதிபதி மைத்திரி இன்று ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் விசேட உரை
ஆசிய வலையத்தின் பொதுவாக தாக்கம் செலுத்தும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடும் ஆசிய ஒத்துழைப்பு மாநாடு 34 நாடுகளின் பங்குபற்றுகையுடன் தற்போது பாங்கொக் நகரில் நடைபெற்று வருவதுடன் அதன் அரச தலைவர்கள் மாநாடு இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளார்.
ஆசியாவின் உற்பத்தித் திறனை அதிகரித்து உலகில் அதிக போட்டித் தனை;மைவாயந்த ஒரு வலையமாக ஆசிய வலையத்தை ஆக்குவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்த அரச தலைவர்கள் மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதோடு அது தொடர்பாக பல பொது இணக்கப்பாடுகளும் எட்டப்படவுள்ளது.
இலங்கைக்கும் ஏனைய ஆசிய நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேலும் எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது உரையில் விளக்கவுள்ளார்.
அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து ஆசிய வலையத்தை முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்வதற்கு ஆசிய ஒத்துழைப்பு அமைப்பின் அரச நிகழ்ச்சித் திட்டம் இம்மாநாட்டுடன் இணைந்ததாக இன்று ஆரம்பமானது. ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குபற்றும் 34 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள்இ கைத்தொழிற்துறைத் தவைர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். -(3)




