செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி டில்லி மகாபோதிக்கு விஜயம்

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி நேற்று புதுடில்லி மகாபோதி நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்படி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு பின்னர் அங்கு செல்லும் இலங்கையின் முதலாவது அரச தலைவர் இவராவார்.
அந்த விகாரை வளாகத்தில் அமைந்துள்ள சேர் அநகாரிக தர்மபாலவின் உருவச் சிலைக்கு ஜனாதிபதி மலர் அஞ்சலி செலுத்தினார். புதுடில்லியில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)