ஜனாதிபதி மைத்திரி தாய்லாந்து பிரதமரை சந்தித்தார்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாய்லாந்தின் பிரதமர் பிரயெட் சான்-ஓ-சாவை (Prayut Chan-o-cha ) சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை தாய்லாநதில் பெங்கொக் நகரிலுள்ள அரச மாளிகையில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.
பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் ஷெனுக்க செனவிரத்ன ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொணடனர்.
இதே வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஆசிய புரிந்துணர்வு கலந்துரையாடல் மாநாட்டில் (Asia Corporation Dialogue ) (ACD) உரையாற்றவுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக் நகரில் 34 நாடுகளின் பங்களிப்புடன் இந்த மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ளது.
ஆசிய பிராந்தியத்தை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதே மாநாட்டின் நோக்கமாகும். பிராந்தியத்தைப் பாதிக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி, நீர், கலாசாரம், சுற்றுலா தொழிற்துறை, நிலைபேறான அபிவிருத்தி உள்ளிட்ட 20 துறைகள் தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது. -(3)




