செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையே விசேட பேச்சுவார்த்தை இன்று

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையே விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.(15)