செய்திகள்

ஜப்பானின் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது

ஜப்பான் புகுசிமா நகரை அண்மித்த பகுதியில் பாரிய பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் அது 7.4ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூகம்பத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. -(3)