செய்திகள்
ஜல்லிக்கட்டில் முதற்தர காளையாக தெரிவாகி காரை வென்ற தொண்டமானின் காளை
தமிழ் நாடு அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் தமிழ் நாட்டின் முதன்மை ஜல்லிக்கட்டு காளை என்ற பெறுமையை இலங்கையின் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளைகள் தனதாக்கி கொண்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் செந்தில் தொண்டமானின் காளையை அடக்க யாருக்கும் முடியாது போனது. இந்த போட்டியில் செந்தில் தொண்டமானின் 5 காளைகள் பங்குபற்றியிருந்தது.
இதற்காக கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)








