ஜாதிக ஹெல உறுமய ஐ.ம.சு.கூவிலிருந்து விலகியது
ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலக தீர்மானித்துள்ளது.
நல்லாட்சியால் நிறைந்த நாட்டை உருவாக்கும் நோக்கிலேயே கூட்டமைப்பிலிருந்து விலகியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய இதுவரை காலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகவே செயற்பட்டது. ஆனால் தற்போதைய நிலைமையில் அதிலிருந்து விலக கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. நீதி நியாயம் மிக்க நாடு உருவாக வேண்டும். அந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டே நாம் அதிலிருந்து விலக தீர்மானித்துள்ளோம்.




