செய்திகள்

ஜீ.எஸ்.பி சலுகைக்காக எல்லா நிபந்தனைகளுக்கும் இணங்க மாட்டோம் : அரசாங்கம்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்படும் எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு இணங்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முடிந்ததை மட்டுமே நாம் நிறைவேற்றுவோம் சமூகம் மற்றும் காலச்சாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு பதிப்பான எந்த விடயத்தையும் தாம் நிறைவேற்ற மாட்டோமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில் நிதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய நிதி இராஜங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தனவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையில் நிறைவேற்றப்பட வேண்டுமென கூறும் நிபந்தனைகளில் நாட்டின் கலாச்சாரத்திற்கு பாதிப்பான விடயங்களும் இருப்பதாகவும் இதனால் எல்லா விடயங்களுக்கும் தாம் இணங்க மாட்டோம் எனவும் செய்ய முடிந்ததை மட்டுமே செய்வோம் எனவும் இலங்கைக்கு அந்த வரிச் சலுகையை வழங்குவதா இல்லையா என்பதனை ஐரோப்பிய ஓன்றியமே தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)