ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
19 வயதிற்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை வங்காள தேசத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்ததால் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு இந்தியாவை அந்த அணி 145 ரன்களில் சுருட்டியது.
இதனால் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கியாசி கார்ட்டி மற்றும் கீமோ பால் ஆகியோரின் அபார ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.




