செய்திகள்

ஜெனிவாவுடன் இலங்கை கூடுதலாக ஒத்துழைக்க வேண்டும்;ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன், இலங்கை  அரசாங்கம் அதிகம் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவாவில் நடந்த வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன் இலங்கை  அரசாங்கம் இணங்கிச் செயற்படுவதை வரவேற்றார்.

கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையான நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை  அரசாங்கம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் இன்னும் கூடுதலாக ஒத்துழைத்துச் செயற்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில், சிறிலங்காவுக்கு அனைத்துலக சமூகம் எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கருத்துக்களை எதிர்பார்ப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி குறிப்பிட்டார்.

n10