செய்திகள்

ஜெனீவாவில் இலங்கை வெற்றி பெறும்: அமைச்சர் மலிக் சமரவிக்கிரம

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான விவகாரத்தை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி மற்றும் மாற்றங்களுக்கிணங்க சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான பார்வை மாற்றம் பெற்றிருக்கும் நிலையில் ஜெனீவா பிரச்சினையை வெற்றிகொள்ள முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் தமது கேள்வியின் போது; இலங்கையில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக படையினருக்கு எதிராக ஜெனீவாவில் குற்றச்சாட்டு உள்ளது. தற்போது ‘ஜீ7’ மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளே மேற்படி குற்றச்சாட்டையும் அழுத்தங்களையும் பிரயோகித்திருந்தன. இந்த நிலையில் எதிர்வரும் ஜுலையில் ஜெனீவா அமர்வு எத்தகைய பிரதிபலிப்பை ஏற்படுத்தும் எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ரவி கருணாநாயக்க 40,000 பேர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை நாம் அன்றும் இன்றும் எப்போதுமே நிராகரிக்கின்றோம்.

அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இது தொடர்பில் ஐ. நா. செயலாளர் நாயகத்திடம் தெரிவிக்கையில் உள்ளக விசாரணையொன்றுக்கு உறுதியளித்தார். அதற்கு இப்போது நாம் பதிலளிக்க நேர்ந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் போலன்றி இப்போது நாட்டின் நிலை மாற்றமடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
R-06