ஜெனீவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இணைந்து செயற்படுவோம்: நிஷா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அமுல்படுத்துவது குறித்து இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து செயற்படுவதாக தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் மிகவும் சிறந்த முறையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்து இலங்கை மக்களுக்கும் பயன்தரக் கூடிய வகையில் அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் தனது பெயரைத் தக்க வைத்துக் கொள்ள இலங்கை குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மனித உரிமை மேம்பாடு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
R-06




