ஜெயம் ரவியின் ‘வனமகன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டம்
‘தனி ஒருவன்’, ‘போகன்’ வெற்றி படங்களுக்கு பின்னர் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘வனமகன்’, விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், ஜெயம் ரவியின் இன்னொரு ‘பேராண்மை’யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் மற்றும் தியேட்டர் ரிலீஸ் தேதிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் முதல் வாரத்திலும், திரையில் மே 12 அல்லது 19ல் ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீஸ் ஆவதால் நல்ல ஓப்பனிங் வசூல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவி, சாயிஷா சேகல், வருண், தம்பி ராமைய, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஏ.எல்.அழகப்பன் தயாரித்துள்ளார்.




