செய்திகள்
ஜெயலலிதாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 135 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோடி தனது ட்விட்டரில், “சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.





