செய்திகள்

ஜெயலலிதா வேடம் தான் என் வாழ்நாள் கனவு – ரம்யா கிருஷ்ணன்

நேற்றிலிருந்து நடிகை ரம்யாகிருஷ்ணன் முகத்தை மட்டும் எடுத்து மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் இணைத்து அம்மா என்ற பெயரில் ஒரு படம் எப்படி இருக்கும் என்று ஒரு போஸ்டர் இணையதளத்தில் பரவியது.

ரம்யா கிருஷ்ணன் அப்படியே அச்சு அசலாக ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார். எனவே, அவரிடம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால் அதில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு அவர் கூறும்போது, நிறைய பேர் என்னிடம் பலமுறை உங்களுடைய கனவு கதாபாத்திரம் எது? என்று கேட்டுள்ளார்கள். அப்போதெல்லாம் நான் எந்த பதிலும் கூறவில்லை.

இப்பொழுது நான் கூறுகிறேன், என்னுடைய வாழ்நாள் கனவு கதாபாத்திரம் ஜெயலலிதா அம்மாதான். அவர்களுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது ரொம்பவும் சிரமமான ஒன்றுதான். நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல திரைக்கதையோடு இயக்குனர்கள் என்னை அணுகினால், அம்மாவின் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் .

N5