செய்திகள்

ஜெயாவுக்கு வட மாகாண சபையில் அஞ்சலி

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன். வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அஞ்சலி உரையை நிகழ்த்தியுள்ளார்.
இன்றைய சபையமர்வின் ஆரம்பத்திலேயே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், வடமாகாணசபை சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பிலும் அஞ்சலி உரையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்த்தினார். -(3)