செய்திகள்

ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார்!

இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சுப்ரமணியம் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார்.

கொழும்பில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படும் 8 பேர் கொண்ட தமிழ்த் தலைவர்கள் குழுவுடன் ஜெய்சங்கர் கலந்துரையாடியுள்ளார்.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன, எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.விக்னேஸ்வரன், எஸ்.கஜேந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

-(3)