செய்திகள்

ஜேர்மனியில் தஞ்சமடைந்த இலங்கையர்களை நாட்டிற்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு

யுத்த காலத்தின் போது ஜேர்மனியில் தஞ்சமடைந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்த அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மன் அதிபர் ஏங்கலா மேர்கல் உடனான உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும வகையில் ஜனாதிபதி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

இலங்கையில் அனைத்து இனத்தவர்களும் நிம்மதியாக வாழ்வதற்கான ஜனநாயகம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுதந்திரத்தினை அனுபவிப்பதற்கு ஜேர்மன் வாழ் இலங்கையர்களை மீள வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந் நாட்டு வர்த்தக பிரமுகர்களை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி ஒஸ்ரியா நோக்கி பயணிக்கவுள்ளார்.

n10