செய்திகள்

ஜேர்மனியை அச்சத்தில் உறையவைத்த லொறிதாக்குதல்

மக்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர், கிறிஸ்மஸ் இசை ஓலித்துக்கொண்டிருந்தது, அந்த பகுதி கிறிஸ்மஸ் அலங்காரங்களால் அழகாக காணப்பட்டது. தீடிரென அந்த பகுதியில் உங்கள் கண்முன்னால் அந்த பயங்கரம் நடந்தது.

பேர்லினில் கிறிஸ்மஸ் வியாபாரம் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்குள் லொறியை செலுத்தி நபர் ஓருவர் 12 பேரை கொலைசெய்த சம்பவத்தை பார்த்த பிரிட்டிஸ் சுற்றுலாப்பயணி எமாரஸ்டன் அச்சத்தில் உறைந்துபோய் காணப்படுகின்றார். ஜேர்மனிக்கான தனது முதலாவது விஜயத்தின் போது நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என அவர் தெரிவித்தார்.

நாங்கள் அந்தபகுதியில் இருந்தோம், அழகாக அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தோம், எங்கள் ஹோட்டலிற்கு செல்வதற்கு நாங்கள் தயாரானவேளை பாரிய சத்தமொன்று கேட்டது என அந்த சம்பவத்தை வர்ணித்தார் எமாரஸ்டன்

நாங்கள் திரும்பிப்பார்த்தவேளை மின்சாரவிளக்குகளை சிதைத்துக்கொண்டு லொறியொன்று வருவதையும் எங்களிற்கு முன்னாள் காணப்பட்ட சிறியகடைகள் அழிக்கப்படுவதையும் பார்த்தோம்,இரண்டு நிமிடங்களிற்கு முன்னர் அந்த சம்பவம் இடம்பெற்றிருந்தால் நாங்கள் அந்த லொறியினால் நசுக்கப்பட்டிருப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

german

நாங்கள் எங்கள் ஹோட்டலிற்கு திரும்பிச்செல்வதற்கு அந்த அழிவுகளை கடந்தே செல்லவேண்டியிருந்தது,நாங்கள் மக்கள் தங்கள் தலையை பிடித்தபடியிருப்பதை கண்டோம்,எங்கும் கண்ணாடிகளும் மரச்சிதைவுகளும் காணப்பட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த பகுதியில் காணப்பட்ட இன்னொரு பிரிட்டிஸ் பிரஜை பேர்மிங்காமை சேர்ந்த மார்க்ஸ் பொக்ஸ்-சிறியகடைகளிற்கு இடையில் சிக்குப்பட்ட பலரை காப்பாற்றுவதற்கு தான் உதவியதாக அவர் தெரிவித்தார்.

நாங்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளையே அந்த லொறி நுழைந்தது, நானும் எனது சினேகிதியும் மயிரிழையில் தப்பினோம்,அந்த சம்பவத்தின் பின்னர் காயங்களுடன் நிலத்தில் விழுந்துகிடந்த  சிலரிடம் பேசினேன் அவர்கள் குணமடைந்துவிடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

முகத்தில் குருதிவழிந்தோடும் நிலையில் ஓருவரை அங்கிருந்தவர்கள் தூக்கிச்சென்றதை நான் பார்த்தேன்,சரிந்து விழுந்த கடைகளை தூக்கிநிமிர்த்தி அதற்குள் சிக்குப்பட்டிருந்த பலரை காப்பாற்ற உதவினேன் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த பகுதியில் காணப்பட்ட பத்திரிகையாளரான ஜன்கொலிட்சர் தான் பார்த்த பயங்கரமான சம்பவங்கள் பிரான்ஸில் நைஸில் 86 பேரை பலிவாங்கிய தாக்குதலை நினைவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் அவர் உடனடியாக முகப்புத்தகத்தின் உதவியுடன் அங்கு நடப்பவற்றை நேரலை ஓலிபரப்பு செய்துள்ளார்.நான் சத்தங்களையும் பாரிய கூக்குரல்களையும் கேட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதி முற்றாக சிதைவடைந்து காணப்பட்டது, எங்கும் சிதைந்த கூடாரங்கள்,உடைந்த கண்ணாடிகள், காணப்பட்டன, தரையில் சிவப்பு நிறத்தில் காணப்பட்ட பொருள் ரெட்வைனா அல்லது குருதியா என்பது எனக்கு தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

german 1

பேர்லினைசேர்ந்த இப்ராகிம் கொலாக் என்பவர் இது நிச்சயமாக திட்டமிட்ட தாக்குதல் என தெரிவித்துள்ளார்.நான் அந்த பகுதியில் எனது நண்பர்களுடன் நின்றிருந்தேன் இரவுஉணவை உண்பதற்காக எங்காவது செல்லலாம் என நினைத்தவேளையில் கிறிஸ்மஸ் வர்த்தகநிலையங்கள் சரிந்து விழுகின்ற சத்தம் கேட்டது,நான் திரும்பிப்பார்த்தவேளை பயங்கரவேகத்தில் லொறியொன்று  சென்றுகொண்டிருப்பதை பார்த்தேன்,நான் நிச்சயமாக இது தாக்குதல் என்றே கருதுகிறேன்,எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பிரிட்டனை சேர்ந்த மற்றுமொரு சுற்றுலாப்பயணி தான் தனது சினேகிதியுடன் அந்த பகுதியில் சுற்றிதிரிந்துவிட்டு  உணவுவேண்டிக்கொண்டிருந்தவேளை  அந்த சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்,உணவை வாங்கிய பின்னர் நாங்கள் அந்த பாதையில் நடந்திருந்தால் நிச்சயமாக லொறியிடம் சிக்கியிருப்போம்,அந்த லொறி பாரிய அழிவை ஏற்படுத்தியது, அதன் வேகத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அதன் சாரதி மேற்கொள்ளவில்லை,நாங்கள் அந்த பகுதியில் காணப்பட்ட கூடாரங்கள் சிதைந்துவிழுவதை பார்த்தோம் என தெரிவித்துள்ளார்.