செய்திகள்
ஜே.வி.பி.யின் அலுவலகம் நாளை யாழில் திறப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட பிரதான அலுவலகம் நாளை சனிக்கிழமை கண்டி வீதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார் .
n10




