ஞானசார தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விளக்கமறியல் எதிர்வரும் 23ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்றவேளை, சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதாக, ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று அவரை ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
n10




