செய்திகள்

டலஸ் அழகப்பெரும பதவி விலகினார்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைமைப்பதவியிலிருந்து தான் விலக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  -(3)