செய்திகள்

டிரம்பின் புதிய அரசாங்கத்துடன் இலங்கை பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது

அமெரிக்கா ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் புதிய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதுவர் பிரசாத் கரியவசம் ஊடாக தற்பேது இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் இதன்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான யோசனைகள் மற்றும் இலங்கையில் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் இதற்காக டிரம்பின் பிரதி நிதியொருவர் எதிர்வரும் வாரங்களில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)