செய்திகள்

டி.யு.குணசேகராவின் அறிக்கை மோடியானது: ரணில் கடும் தாக்குதல்

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் டியூ.குணசேகர சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மோசடியானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முறி பத்திர விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற அறிக்கை என அதனை அவர் கூறினாலும் அதில் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதனால், அது சம்பந்தமாக பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் பிரதமர், டியூ. குணசேகரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய வங்கியின் முறி பத்திரம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்த அறிக்கையில் பொய்யான விடயங்கள் அடங்கியிருப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.