டுபாய் வங்கி கணக்கு தொடர்பாக நான் மைத்திரியுடன் கதைக்கவில்லை : மகிந்த
டுபாய் வங்கிக்கணக்கு தொடர்பாகவோ அல்லது தனது பிள்ளைகளுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவோ தான் எந்தக் கட்டத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கதைத்தில்லையெனவும் தான் மைத்திரியுடன் அது தொடர்பாக கதைத்ததாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுவதில் உண்மையில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் கூறப்பட்டத்தை போன்ற பொய்களில் ஒன்றே ராஜிதவின் கருத்து எனவும் மகிந்த தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது டுபாய் வங்கிக்கணக்கு தொடர்பான தகவல்களை டுபாயிலிருந்து பெற்றுக்கொள்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் ஜனாதிபதியிடம் அனுமதி கோரி கடிதத்தில் கையொப்பம் பெற்ற நிலையில் அது தொடர்பாக மகிந்த மைத்திரிக்கு தெலைபேசி மூலம் கேட்டதாக ராஜித தெரிவித்திருந்த கருத்து தொடர்பாகவே மகிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




