செய்திகள்

டைட்டானிக் சிதைவுகளை பார்க்க போனவர்கள் என்ன ஆனார்கள்?: தேடுதல் தொடர்கிறது!

ஆழ்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலில் சிதைவுகளை நேரில் பார்க்கும் சுற்றுலா விபரீதத்தில் முடிந்திருப்பதே இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

நீர்மூழ்கி காணாமல் போய் 4 நாட்கள் கடந்துவிட்ட பிறகும் அதற்கு என்னவாயிற்று என்பது இன்னும் தெரியவரவில்லை. நீருக்கடியில் சத்தம் எழுந்ததைக் கண்டுபிடித்துள்ள தேடுதல் குழுவினர், அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி மீட்புப் பணி நடக்கும் இடத்தில் இருந்து கூடுதலாக சப்தம் கேட்பதாக அமெரிக்க கடலோரப்படை தெரிவித்துள்ளது.

இந்த ஒலி காணாமல் போன நீர்மூழ்கியில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும் இது உறுதி செய்யப்படவில்லை. தற்போது சுமார் 4 கி.மீ. ஆழத்தில் தேடும்பணி நடந்து வருகிறது.

இன்னும் சில மணி நேரங்களுக்கே ஆக்சிஜன் இருக்கும் என்று மதிப்பிடப்படும் நிலையில், அதன் பிறகு நீர்மூழ்கியில் இருப்பவர்களுக்கு என்ன ஆகும் என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.
நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் காலியான பிறகு உயிர்வாழ்வது ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது என்றும் சிலர் மற்றவர்களை விட நீண்ட காலம் வாழலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
“அவர்கள் ஆக்ஸிஜன் நுகர்வைக் குறைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். ஓய்வெடுப்பார்கள்.அவர்கள் முடிந்தவரை நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க முயற்சிப்பார்கள்.
அதிகப்படியான செயல்பாடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், அதிக கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும் என்று அவர் விளக்கினார்.
அட்லாண்டிக் பெருங்கடலில் 19,650 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன.

காணாமல் போன நீர்மூழ்கியை கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

-(3)