இணையவழி கடன் வழங்கும் நிலையமொன்று சுற்றிவளைப்பு!
தெஹிவளையில் அமைந்துள்ள இணையவழி மூலமான கடன் வழங்கும் நிலையமொன்றை சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரினர், ஐந்து சீனர்கள் உட்பட அறுவரை கைது செய்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது 8 கணினிகளும், 13 மடிக்கணினிகளும் மற்றும் 49 மொபைல் தொலைபேசிகளும் பறமுதல் செய்யப்பட்டுள்ளன.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இணையவழி மூலம் கடன் வழங்கும் போது, கடனாளியின் மொபைல் போனின் தனிப்பட்ட தகவல்களை, OPT எண் மூலம் பெற்று, சமூகத்தில் சில தகவல்களை பரப்பி மிரட்டி, உரிய பணத்தை பெற்றுக் கொண்டமையும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படடு வருகின்றது.
அதேநேரம், இவ்வாறான முறைப்பாடுகள் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனிப் புலனாய்வுப் பிரிவினருக்கோ தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
-(3)




