செய்திகள்

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு அமைக்கப்பட்டது

தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவேளை அந்த ஆணைக்குழுவின் மற்றைய உறுப்பினர்களாக சட்டத்தரணி கிசாலி பின்டோ ஜயவர்தன , சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சிஹேவா , முன்னாள் நீதியரசர் சலீம் மர்சுப் மற்றும் செல்வகுமாரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமன கடிதங்களை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டனர். -(3)