செய்திகள்

தகவல் அறியும் சட்டம் 3 ஆம் திகதி முதல் அமுல்

தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு பெப்ரவரி 3ம் திகதி இடம்பெறும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு இடம்பெறும் நாளிலிருந்து பொதுமக்களுக்கு தகவல்களை அறியும் உரிமை கிடைப்பதாக அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
தகவல் தொடர்பான அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கான தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தகவல்களை வழங்கும் அதிகாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாகவும் அமைச்சர் தெரிவித்தார். -(3)