செய்திகள்
தகவல் அறியும் சட்ட மூலம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் : கயந்த கருணாதிலக்க
தகவல் அறியும் சட்டமுலம் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் அறியும் சட்ட மூல முன்மொழிவு அடுத்த வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது மிகுந்த நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்ட குறித்த சட்ட முன்மொழிவு மாகாணசபைகளின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னரே பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10




