செய்திகள்

தங்கொடுவவில் எரிந்த வானுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அடையாளம் காண முடியதளவு கருகி போயுள்ளன

தங்கொடுவ பகுதியில் இன்று காலை வானொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அடையாளம் காண முடியாதவாறு தீயினால் எரிந்து கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை பொலிஸ் அவசர சேவை இலக்கமான 119ற்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய அங்கு சென்ற பொலிஸார் அந்த சடலங்களை மீட்டுள்ளனர். தீயினால் எரிந்து முற்றாக சேதமடைந்த வானுக்குள் சடலங்கள் இருந்துள்ளதுடன் வானுக்கு வெளியே இரத்த கரைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா அல்லது விபத்து சம்பவமா என பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
n10
1 2 12814511_10205894407508295_2019462706319082266_n