செய்திகள்
தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தஜிகிஸ்தான் – சீன எல்லையை அண்மித்து 7.3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று(23) காலை 8.37 க்கு, 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீன எல்லையில் இருந்து தஜிகிஸ்தான் நோக்கி 82 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எனினும் சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை
-(3)




