செய்திகள்

தனக்கு எதிரான அவுஸ்திரெலிய ஊடக செய்தியை நிராகரிக்கிறார் ஜனாதிபதி மைத்திரி

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2009 காலப்பகுதியில் விவசாய அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தனது இணைப்பு செயலாளர் ஊடாக அவுஸ்திரெலிய நிறுவனவமொன்றிடமிருந்து 2.1 மில்லியன் டொலர் அரசியல் நன்கொடையை பெற்றுக்கொள்ள முயற்சித்தாக தெரிவித்து அவுஸ்திரெலிய Sydney morning Herald என்ற செய்தி இணையத்தளத்தில் செய்தியொன்று வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தச் செய்திக்கு மறுப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவரின் ஊடகப்பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறி;க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளமான Sydney morning Herald இல் வெளிவந்த செய்தியொன்றுக்கு அமைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2009 ஆம் ஆண்டில் விவசாய மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பணியாற்றியபோது அவரது பணிக்குழாமின் உத்தியோகத்தர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தனிப்பட்ட கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
அவ்வாறான ஒரு சம்பவத்துடன் தமக்கு எவ்விதமான தொடர்போ பங்களிப்போ இருக்கவில்லையென தெரிவிகும் ஜனாதிபதி அவர்கள். மேற்குறிப்பிட்ட செய்தி தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிவிக்கின்ற அதேசமயம்இ தமது அரசியல் வாழ்கையில் ஒருபோதும் அவ்வாறான ஊழல் , மற்றும் முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடவோ ,அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ, அவ்வாறான செயற்பாடுகளில் சம்மந்தப்படவோ இல்லையென மேலும் தெரிவிக்கின்றார்.   -(3)