செய்திகள்

தனக்கு ”மகாரஜா” என பெயர் சூட்டியது மைத்திரியே : மஹிந்த வெளியிட்ட தகவல்

தன்னை ”மஹாரஜா” என்றழைக்க அப்போது சுகாதார அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமெனவும் அவரே இந்தப் பெயரை தனக்கு சூட்டியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை மகவத்தென்ன விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க தெரியவில்லை. தமக்கு முடியாது போனதும் அதன்போது மகிந்த என்ற பெயரை பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். அன்று என்னை ”மகாரஜா” என அழைக்க அப்போது சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவே காரணாகும். அவரே இந்தப் பெயரை எனக்கு சூட்டினார். இதனை விடுத்து அந்தப் பெயர் நானாக வைத்துக்கொண்டதல்ல. என அவர் தெரிவித்துள்ளார்.