செய்திகள்

தனது அணியிலிருந்து மேலும் சிலரை அரசாங்கம் கைது செய்யவுள்ளது : மகிந்த தகவல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த மேலும் சிலரை கைது செய்து இந்த மாத இறுதியில் நடத்தவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
புலத்சிங்கள பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் மேற்கொள்ளப்படவுள்ள பாத யாத்திரையை தடுத்து நிறுத்துவதே அரசாங்கத்தினரின் நோக்கம் இதன்படி தற்போது கைதுகளை ஆரம்பித்துள்ளது. இனி எதிர்வரும் நாட்களில் மேலும் சிலரை கைது செய்து போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.
n10