செய்திகள்

தனித்துப் போட்டியிட தமிழரசுக் கட்சி தீர்மானம்!

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தனித்து போட்டியிட இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று(10) நண்பகல் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்.

இதன்படி தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபைகளுக்காக வீட்டு சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளது.

-(3)