செய்திகள்

போர் வெற்றியை தனியாக கொண்டாடும் மகிந்த தரப்பு: படையினர் பங்கேற்க அரசு தடை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தரப்பினரால் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்க படையினருக்கு அனுமதியில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் யுத்த நிறைவு நிகழ்வுகள் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற முன்றலில் நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் குருணாகலில் யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், படைவீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்
R-06