செய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்த பட்ச சம்பளத்தை 17,500 ரூபா தொடக்கம் 27,000 ரூபா வரைக்கும் 9,500 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட் சம்பளத்தை 700 ரூபாவில் இருந்து 1,080 ரூபா வரைக்கும் 380 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2026.01.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 27,000 ரூபா குறைந்தபட்ச சம்பளத்தை ரூபா 30,000 ரூபா வரைக்கும், 1,080 ரூபா என்ற குறைந்தபட்ச நாள் சம்பளத்தை 1,200 ரூபா வரைக்கும் அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளம் மற்றும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்குரிய ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு தொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.