தனியார் பஸ் பகிஸ்கரிப்பின் போது கல் வீச்சு தாக்குதலுக்கு இலக்கானவர் தீவிர சிகிச்சை பிரிவில்
கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற தனியார் பஸ் சேவை பணிப்பகிஸ்கரிப்பு காலப்பகுதில் இ.போ.ச பஸ் மீதான கல்வீச்சு தாக்குதல்களின் போது காயத்திற்குள்ளான இராணுவவீரர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவியே சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவத்தில் காங்கேசன்துறை இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரரான சந்தன சாந்த சுமனரத்ன (38) என்பவரே தமது சொந்த ஊரான நாவலப்பிட்டிக்கு கடந்த 2ம் திகதி சென்றுகொண்டிருந்தபோது இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானார். மதவாச்சி இகிரிகொள்ளாவ என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. -(3)




