தனுஷ் படைத்த பிரமாண்ட சாதனை !
தனுஷ் நடிப்பில் கடைசியாக வந்த கொடி சூப்பர் ஹிட்டானது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் விரைவில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளிவரவுள்ளது.
மேலும், விஐபி-2, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் என வரிசையாக நடித்து வருகின்றார், இது மட்டுமின்றி விரைவில் ஆங்கிலப்படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளார்.
தற்போது தனுஷ் சத்தமே இல்லாமல் பெரும் சாதனை ஒன்றை யு-டியூபில் செய்துள்ளார், அது என்னவென்றால் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் தான்.
இதில் ‘டானு டானு’ பாடல் யு-டியூபில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது, இதற்கு முன் தனுஷுன் கொலைவெறி பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.




