செய்திகள்

தன்னைவிட மைத்திரி – ரணில் அரசாங்கமே அதிக கடன் பெற்றுள்ளது : மகிந்த

தனது ஆட்சிக்காலத்தை விட தற்போதைய ஆட்சிக்காலத்திலேயே அதிககடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
சிதுல்பச்ச விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த அவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது காலத்தை விட இந்த அரசாங்கமே அதிக கடனை பெற்றுக்கொண்டுள்ளது. நான் பெற்ற கடன் நிதி மூலம் அபிவிருத்திகளை செய்தேன். அவற்றையே இவர்கள் திறந்து வைக்கின்றார்கள். ஆனால் இவர்கள் வாங்கிய கடனால் நடப்பது எதுவுமில்லை. மக்களிடம் கேட்டால் அதனை கூறுவார்கள். என அவர் தெரிவித்துள்ளார். -(3)