செய்திகள்

தபால்மூல வாக்களிப்பு நடைபெறுமா?

கட்டணம் செலுத்தப்படாவிட்டால் தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாதென அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச அச்சகம் எழுத்து மூலம் இதனை அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தபால் மூல வாக்கெடுப்புகள் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடக்கவுள்ளது.

இந்நிலையில், தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடலொன்று இன்று(14) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் இன்று(14) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.

-(3)