செய்திகள்

தபால் மூல வாக்கெடுப்பு ஒத்தி வைப்பு!

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள்முன்னர் அறிவிக்கப்பட்ட தினங்களில் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 03 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அன்றைய தினங்களில் இடம்பெறாது.

மேலும், உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவதற்கான திகதி குறித்து தேர்தல் ஆணைக்குழுவினால் விரைவில் தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

-(3)