தப்பியோடிய விமானப்படை வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு
இலங்கை விமானப்படையில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2009 ஜூன் முதலாம் திகதி முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் தப்பியோடியவர்கள் பொது மன்னிப்புக்காலத்தில் முறையாக விமானப்படையில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பொது மன்னிப்பு காலம் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்ப மாகவுள்ளது. பொது மன்னிப்பை பெற விரும்புபவர்கள் காலை 9 .00 மணி முதல் மாலை 3.00 மணி வரை கொழும்பிலுள்ள விமானப் படைத் தலைமையகத்திற்கு சென்று அதற் கான பணிகளை மேற்கொள்ள முடியும்.




