செய்திகள்

தமது பெற்றோரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிறிபாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள்

1000 ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது உரிமைகள் தொடர்பாக பெருந்தோட்ட தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பத்தனை சிறிபாத கல்வியியற் கல்லூரி மாணவர்களினால் நேற்று கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டிருந்தனர். இந்த கல்லூரியில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளே அதிகமாக கற்கும் நிலையில் தமது பெற்றோருக்காக இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு தமது பெற்றோரின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கையெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
கல்லூரி வளாகத்திற்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதியளிக்கப்படாத நிலையில் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். IMG_2669 IMG_2703 IMG_2711 IMG_2728-(3)