செய்திகள்

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமுல்!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமுலில் இருக்கும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிணங்க, 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்ப்டடுள்ளது.

தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்பிராந்தியங்களில் மீன்கள் இனப்பெருக்க காலமாக குறிப்பிட்ட நாட்கள் கருதப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் கடலில் மீன்பிடிக்க செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

-(3)