செய்திகள்
தமிழக மீனவர்கள் 9 பேருக்கும் மார்ச் 18 வரை விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பினுள் அத்தமீறிநுழைந்து சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களையும் இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதிமன்றில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்கும்படி மன்னார் மாவட்ட பதில் நீதவான் கயஸ் பல்டானோ உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த ஒன்பது மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கச்சதீவு கடற்பரப்பில் கைது செய்திருந்ததுடன் குறித்த மீனவர்கள் கடற்றொழிலுக்கு பயன்படுத்திய படகு ஒன்றிணையும் கைபற்றியிருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை பெறுப்பேற்றுகொண்ட மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த 9 தமிழக மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தியபோதே குறித்த உத்தரவை மன்னார் மாவட்ட பதில் நீதவான் பிறப்பித்தார்.
n10




