செய்திகள்

தமிழரசுக் கட்சியின்செயலாளராக குகதாசன் – புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பதவிகளுக்கான பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு, பொதுச்சபை கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெற்றதுடன், கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது.

இந்நிலையில், புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுச் செயலாளர் குகதாசன், சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே சிவஞானம், இணை பொருளாளர்கள் ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

துணைத் தலைவர்கள் K.V.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், அரியநேந்திரன், சத்தியலிங்கம், இணை செயலாளர்கள் சாந்தி சிறிஸ் கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், குகதாசன் அணியினருக்கும் வேறு ஒரு அணியினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்தும், புதிய பதவிகளுக்கான பெயர்கள் முன்மொழியப்பட்டு அவை உறுப்பினர்களினால் வழிமொழியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

-(3)