செய்திகள்

தமிழரின் தொன்மைக்கு சான்றாகும் வானியல் அறிவு

மருத்துவர். சி. யமுனாநந்தா

தமிழர்கள் வருடத்தினை பன்னிரெண்டு மாதங்களாக வானியல் அறிவுக்குச் சார்பாகவே அமைத்தனர். பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றும்போது ஒரு சுற்றுகைக்கு எடுக்கும் காலம் ஒரு வருடமாகும். இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு இராசியில் இருந்து மறு இராசிக்கு சூரியன் செல்லும். இதனால் தமிழ் மாதங்களை சூரிய மாதங்கள் என்றும் கூறுவர்.

astrology

வருடப்பிறப்பு என்பது சூரியன் மீனராசியில் இருந்து மேடராசிக்கு மாறும் நிகழ்வாகும். இது பூமியின் நீள்வட்டப்பாதையில் பூமி சார்பாக வானியலைக் கணித்த தமிழின் தொன்மைப் பெருமையாகும். புவிச்சுற்றுகையின் ஆவர்த்தனத்தில் மீனராசியில் இருந்து மேடராசிக்கு மாற்றம் அடைதல் ஒவ்வொரு யுகத்திலும் ஒரு மாதத்தினால் மாற்றமடையும். அதாவது 365 நாட்கள் கொண்ட நெட்டாண்டு ஒவ்வொரு நான்கு வருடத்திற்கு ஒரு தடவை வருவது போல் மீனராசியில் இருந்து மேடராசிக்கு சூரியன் புலம்பெயர்வது போன்ற புவிச்சுற்றுகை மாற்றம் ஒவ்வொரு 1000 வருடத்திற்கு ஒரு தடவை ஒரு மாதத்தினால் அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு மாதம் வருடப்பிறப்பாக அமைய பன்னிரு யுகம் வரும் வரை மாற்றம் நிகழ்ந்து மீ{ண்டும் அதே ஆவர்த்தனம் தொடரும்.

தொல்காப்பியத்தில் வருடப்பிறப்பு மாதமாக ஆவணி மாதம் குறிப்பிடப்படுகின்றது. இதனை இந்திய வானியல் அறிஞர் சீனிவாசகராகவன் அவர்கள், தொல்காப்பியர் காலம் கி.மு 7000 வருடங்களை உடையது என உறுதிபடக்கூறுகிறார். அதாவது தற்போது தமிழர்கள் கலியுகத்தில் வருடப்பிறப்பினைச் சித்திரை மாதத்தில் கொண்டாடுகின்றனர். எனவே ஆவணி மாதத்தில் வருடப்பிறப்பு ஏற்பட்ட யுகங்களைப் பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும். அதாவது தமிழர் வானியலை அடிப்படையாக வைத்து வருடப்பிறப்பினை சூரியன் மீனராசியில் இருந்து மேடராசிக்கு மாறுவதாக துல்லியமாகக் கணித்துள்ளனர். தமிழர்களின் வருடப்பிறப்பு ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மாதத்தினால் மாற்றமடைகின்றது. தமிழர்கள் அறிவியலில் முதன்மையானவர்கள் மட்டுமல்ல வரலாற்றிலும் தொன்மையானவர்கள் என்பதனை இவ்வுண்மை புலப்படுத்துகின்றது. இற்றைக்கு மூன்று யுகங்கள் முதல் உள்ள காலத்தில் தமிழர்கள் வருடப்பிறப்பினைத் தை மாதத்தில் கொண்டாடினர். இதனாலேயே வெறும் இலக்கியங்களை மட்டும் நோக்கி தமிழரின் புத்தாண்டு தொடர்பான தவறான வாதங்கள் அண்மையில் முன்வைக்கப்பட்டன.

astrology 1அடுத்து இற்றைக்கு 3000 வருடங்களுக்கு முற்பட்ட கால கடல்கோள் புலப்பெயர்வு மக்களின் கூட்டமே யூதர்கள். இவர்களின் வருடப்பிறப்பு தை மாதத்தில் வருகின்றது. அதாவது இவர்கள் புலம் பெயர்ந்த காலத்தில் கொண்டாடிய வருடப்பிறப்பையே இன்னமும் கொண்டாடுகின்றனர்.

தமிழின் தொன்மையையும், தமிழரின் வானியல் உண்மையையும் மீளவும் உறுதிப்படுத்த வேண்டியது எமது இளம் சந்ததியினரது கடமையாகும். குறிப்பான வானியல் உண்மைகளை இன்றைய வானியல் பௌதீகத்தில் ஆராய்ந்து உறுதிப்படுத்தலாம்.