செய்திகள்

தமிழரின் பிரச்சினைக்கு சமஷ்டியே தீர்வு : வடக்கு முதல்வர்

நாட்டில் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ்வதாக உணரவில்லையெனவும் அவர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டுமென்றால் சமஷ்டியே அதற்கான தீர்வு எனவும் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஊடவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ்வதாக உணரவில்லை. இராண்டாம் தரமாகவே நோக்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் சமஷ்டி யாப்பே எமது பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென கருதுகின்றோம். சமஷ்டி நாட்டை ஐக்கியப்படுத்துமே தவிற பிரிக்காது. அந்த தீர்வு எவ்வாறு இருக்க வேண்டுமென நாமே பேசி தீர்மானிக்க வேண்டும். -(3)